Tuesday, July 14, 2026

ஶ்ரீ vs திரு

ஶ்ரீ vs திரு 

எது சாஸ்த்ரோக்தமானது?

ஶ்ரீ யா?
திருவா?

இது ஒன்றை உயர்த்தி உச்சி முகர்ந்தால் கர்வம் கொள்ளும் தர்க்கப் பொருளல்ல.

இங்கே உயர்ச்சி தாழ்ச்சிகளுக்கே இடம் இல்லை. Just fallacy.

கவியரசரின் தீர்க்கம்:

 "மொழி என்பது மனிதர்களை இணைக்கும் பாலம், அது பண்டிதர்களின் பிடியில் சிக்கித் தனிமைப்பட்டு விடக்கூடாது".

தொன்று தொட்ட பிற மொழித் தொடர்பு, குறிப்பாக சம்ஸ்கிருதத் தொடர்பு குறித்து, கவியரசர்:

"தமிழில் பல நூற்றாண்டுகளாகப் பழகிப்போன வடமொழி (சமஸ்கிருதம்) மற்றும் பிறமொழிச் சொற்களை மக்கள் இயல்பாகப் பேசி வருகிறார்கள். அவற்றை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு, புதிய தூயத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு வருவதால் குழப்பமே மிஞ்சும் என்பது கவிஞரின் வாதம்."

Back to ஶ்ரீ:

மஹா ஸ்வாமி in தெய்வத்தின் குரல் vol 4 chapter அத்வைதம், topic head ப்ரேயஸ் ச்ரேயஸ் 

A little etymology:

ச்ரியம் என்பதிலிருந்து ச்ரேயஸ்.

ஶ்ரீ என்பதிலிருந்து ச்ரியம்.

ஶ்ரீ என்றால் லக்ஷ்மி., செல்வத்தின் தேவதை, மங்கள தேவதை.

எது சிறந்த, சரியான செல்வம்?

ஆத்மாவுக்கு நல்லது - ச்ரேயஸ் - செய்கிறவை தான் நிஜமான செல்வமும், மங்களமும் நித்ய ஶ்ரீ யும்.

' உசந்த நன்மைகள் உண்டாக வேண்டும் ' என்று ஆசீர்வதிக்கின்ற போது ' எல்லா ச்ரேயஸ்ம் உண்டாகட்டும் ' என்கிறோம்.

இப்போது ' ஶ்ரீ ' வேண்டாம், ' திரு ' தான் வேண்டும் என்கிறார்கள். தப்பான பாஷாபிமானத்திலே அப்படிச் சொல்கிறார்கள். சில சப்தங்களுக்கே நல்லது செய்யும் சக்தி உண்டு. அதாவது
 ''ச்ரேயஸ்" உண்டு.

நையாண்டி செய்து விட்டதாக களிப்பில் இருப்பவர்கள் - மொழிக் காவலர் என்றெல்லாம் சுய பிரகடனம் செய்யும் அன்பர்கள் - எல்லாம் சற்றே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். தாங்கள் தாங்கிக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் தங்கள் தாய் பாஷையில் தங்கள் பாண்டித்யம் எவ்வளவு என்று. துண்டுச் சீட்டே திணறல். எத்தனை பெயருக்கு தங்கள் பெயருக்கு தங்கள் தாய் பாஷையிலேயே பெயர்கள் என்று. பலருக்கு பரத கண்டம் தாண்டிய நாமோதயங்கள். International outlook.

Wednesday, June 17, 2026

Obsession.... தானெழுந்தருளி

ஒரு முறை கன்பியூசியின் சீடர் சீன தத்துவ ஞானி Lao Tzu வின் எப்படி தன் உள்ளே தன் தன்மையை உணர்வது குறித்து கன்பியுசியூசிடம் வினவினார்.

அந்த தருணத்தில் சீடரைக் கடிந்து கொண்டாராம் கன்பியூசியஸ்.

ஏனோ ஓர் உள் உணர்வு கன்பியூசியஸை
சீடர் Lao Tzu வைப் பற்றி கேட்டதிலிருந்து ஆட்கொண்டுவிட்டது. தானும் தன் தன்மையை உணர்வது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது.

இந்த மனித சுவாபத்தைக் குறித்து Osho வின் வரிகள்:

"..But the more he wanted to avoid him, the more he became interested. That's how the human mind functions. Whatever you want to avoid you will come across again and again. You will become enchanted....Finally decided to meet him...".

இதைப் படித்ததும் மஹா ஸ்வாமி அவர்களிடம் அன்பர்கள் முறையிட்டது 
நினைவுக்கு வந்தது. அன்பர்களின் கவலை, "ஸ்வாமி, நம் சனாதன மதத்தையும், கடவுள்களையும் இழிவு படுத்தும் பெரியவர் ஒருவரின் சிலையை ஆலயங்கள் நிறுவுகிறார்களே....மனது புண்படுகிறது.."

அதற்கு மஹா ஸ்வாமி அவர்களின் ஆழ்ந்த பதில்,
".....நம்மையெல்லாம் விட அந்த பெரியவர் சதா சர்வ காலமும் இறை சிந்தனையிலேயே இருக்கிறார். இருந்து விட்டுப் போகட்டுமே.."

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்....

Monday, June 8, 2026

Bible...Maha Swami refers to?

Now a days, there's a fashion, trend in Sanatan hatemongers assuming pride - that they belong to, owe their allegiance to...so and so religion, community et al. The moot question ❓ is are they truthful at the core to the very faith system, which they boast of belonging to.

Contrast this.
Where does Sanatan Dharma - the Hindu Dharma after we were so named by Britishers - hate others?

Vedas are replete with innumerable noble thoughts on tolerance, compassion, the need to feel brotherhood. To site a few:

"Let Noble thoughts come from all sides....
आनो भद्राः क्रतवो यन्तु विश्वत: | ऋग्वेद – 1.89.1
āno bhadrāḥ kratavo yantu viśvato
- Rig Veda 1.89.1

"Vasudhaiva Kutumbakam" (वसुधैव कुटुम्बकम्) 
The whole world is one family"
- Maha Upanishad 

Maha Swami doesn't confine Himself to emphasising only to Vedas, Dharma Sastric Codes. He never misses an opportunity where He can quote from other faith systems too.

One such instance - courtesy தெய்வத்தின் குரல் vol 4 - while He was narrating on உத்திரமேரூர் உத்தமத் தேர்தல் முறை....here is an excerpt on His quoting Bible:

பால் குடிக்கிற குழந்தைகளின் வாய்வழியாக ஈச்வர சக்தியே வருகிறது என்ற அர்த்தத்தில் பைபிளில் (வாசகம்) வருகிறது.

The context.
In those era Election process, the names of the contestants would be written on palm leaves and kept inside vessel, குடம், an young child present there would be called to pick one leaf out. The contestant whose name was written in that leaf would be declared as winner.

Hatemongers come and go.
Sanatan - the eternal - survives 
Yes.
It has been -
Have No Doubt.
Has the capability to weather any storm, all notoriety, heinous scandal, crime and can win over and over.
Satyameva Jayate.
सत्यमेव जयते
- Mundaka Upanishad 
Truth alone prevails.
Ohm Shanthi!

Monday, May 18, 2026

இலையா, சூரியனா? போடு விசில்.Whistle your way to State-craft.

இலையா ?
சூரியனா?
எதற்கு வாக்களிப்பது?
பெருந்தலைவர் வேறு இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்றாரே. திருவாளர் பொது ஜனம் குழம்பிப் போயினர்.
ஆஹா வெள்ளித் திரையிலிருந்து ஒரு நக்ஷத்திரம் வந்திருக்கிறாரே. அவரையே அமோக வெற்றி பெறச் செய்வோம் என்று வாக்களித்தாயிற்று.
போகப் போகத் தானே தெரியும், இந்தப் பூவின் வாசம் புரிய.

While keeping fingers crossed, we, the Am Admi, have all the rights to know what are the sine qua non of a good leader and in whose hands the responsibility of good state administration is to be vested.

Maha Swami takes us back to the nitty gritties of Election during Chozha Era, esp., to Uthiramerur உத்தமத் தேர்தல் முறை. In the process of narrating what kind of a candidate is eligible to contest, He refers to number of characteristics for a candidate elaborated in the தேர்தல் முறை.

Here is an excerpt from தெய்வத்தின் குரல், vol 4 dealing with all round integrity of a candidate:


இந்தக் காலத்தில் சிலபேரைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் – பணவிஷயத்தில் ரொம்பவும் ந்யாயமாயிருப்பவர். கணக்குகளில் ரொம்பவும் கறார் என்று. ஆனாலும் இப்படிப்பட்டவர்களுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரை(எல்லா அம்சங்களிலும் அவர்களுடைய நடவடிக்கைகளை)ப் பார்த்தால் அவற்றில் சிலதில் த்ருப்தி இல்லாமலும் பலபேருடையது இருக்கிறது. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமலிருக்கிறது. படிப்பு, வயஸு, கார்யத்திறமை எல்லாம் சேர்ந்து, நடத்தையிலும் எல்லா அம்சங்களிலும் சுத்தமாக இருக்கிறார்களா என்று பார்த்தால் எங்கேயாவது இடறுகிறது. நாமும் ‘பரவாயில்லை; அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாட்டா பாதகமில்லை’ என்று இவர்களிடம் நாட்டு நிர்வாஹத்தை ஒப்புவிக்கிறோம். ஆனால் ‘ஹ்யூமன் நேச்சர்’ (மனுஷ்ய இயற்கை) போகிற போக்கில், இப்படிக் கலந்தாங்கட்டிகளாக இருக்கிறவர்களுக்கு ஒரு பதவி, ஸ்தானம் என்பது கிடைத்த பிறகு, ஐந்துக்கு இரண்டு என்பது ஒன்று, அரை, கால், ஸைஃபர் என்று சரிந்துகொண்டே போகிறது. இதனால்தான், அர்த்த சுத்தத்தை மட்டும் சொல்லாமல், ஆனாலும் அதுதான் பொது நிர்வாஹத்தில் மிகவும் முக்யமான விஷயமாதலால், அதைப் பிரித்து முதலிடம் கொடுத்துச் சொல்லி, அதோடுகூட ‘ஆத்மசுத்தம்’ என்பதாக ஒருவனுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரும் பழுதில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமென்று விதியில் சேர்த்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஆஸ்திக்யம், சாஸ்திராபிமானம், தெய்வத்திடம் பயபக்தி, அடக்கம், கட்டுப்பாடு முதலிய எல்லாமே பொதுவாக ஜன ஸமூஹத்தில் ஆழமாகப் பரவியிருந்ததால் மக்களின் காரக்டர் – லெவல் மிகவும் உயர்வாயிருந்தது. இன்றுபோல் தப்பு வழிகளில் இழுக்கிற அநேகக் கவர்ச்சிகளும் அப்போது கிடையாது. எனவே, சல்லடை போட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டுமென்றில்லமால் அங்கேயும் ஒரு சிலர் பூர்ணமாக ஆத்ம சுத்தமுடையவர்கள் என்னும்படியாக இருந்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பொது நிர்வாஹத்துக்கு வரலாம், வரமுடியும் என்று ஐந்தாவது clause (ஷரத்து) நிர்ணயித்து விடுகிறது.

Sunday, May 10, 2026

கல்வித் தகுதி - how important is educational qualification

வேட்பாளருக்கான கல்வித் தகுதி வேண்டுமா?

One may wonder what a question it is!

True, it's heartening to see many in 2026 TN council of Ministers are qualified - two Drs, one out of whom was an ex bureaucrat, tax Administrator, another an Engineer turned lawyer. Majority in the first oath taking 9 are higher education qualified.

But, the quintessential question ❓ is what's the prerequisite qualification - as per our Sastras - to become a member. In post independence era, we go by Our Constitution when it comes to anything in life. What, Maha Swami refers to as good education is, beyond modern contemporary academic campuses, deep value systems embedded in Sastras. Unfortunately Sastras are mistaken as a particular religion oriented. Our people have pride in declaring their allegiance to திருக்குறள். At the question how one finds out and learn Sastric codes, Maha Swami pointed to திருக்குறள், நன்னெறி. All these epics deeply imbed the very essence of the Sastras.

If our Netas' affinity for Thiruvalluvar is beyond ken of doubt, திருக்குறள், நன்னெறி have to be our Gospels and in people's expectations of adherence to these Holy texts in State-craft by their Honorable Representatives, we would pave way for Good Governance and harmony here.

Here's excerpt of Maha Swami's reference:
கல்வித் தகுதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
Toggle navigation
காமகோடி
வயஸு நிர்ணயம் சாஸனத்தின் ஸபை அங்கத்தினருக்கு விதித்த மூன்றாவது யோக்யதாம்சம். நாலாவது யோக்யதாம்சம் கல்வி பற்றியது. ஸபை அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நல்ல படிப்பாளியாக இருக்கவேண்டும் என்று விதி செய்திருக்கிறது. அந்தக் காலத்தில் படிப்பு என்றால் முக்யமாக சாஸ்த்ரப் படிப்புதான்.

எல்லாம் சாஸ்திரந்தான்– டான்சை பரத சாஸ்திரம் என்கிறோம், ஸயன்சை விஞ்ஞான சாஸ்திரம் என்கிறார்கள். ஆனாலும் பழையநாள் கல்வித் திட்டத்தில் சாஸ்திரம் என்றால் முதலில் ஆத்மாவைப் பற்றிய, பரமாத்மாவைப் பற்றிய வைதிகமான சாஸ்திரங்கள்தான்; அப்புறம் அதற்குள்ளேயே ஸூசனையாக வருகிற நன்னெறி, நல்வழிக்கோட்பாடுகளை விவரித்து விஸ்தாரமாக விதிகள் வகுத்து எழுதிய தர்ம சாஸ்திரம் , நீதி சாஸ்திரம் முதலியன; அதற்கப்புறம் காவ்யம், ஜாகரஃபி, ஹிஸ்டரி, கணிதம், ரஸாயன சாஸ்திரம் (என்கிற கெமிஸ்ட்ரி) பௌதிக சாஸ்திரம் (என்கிற ஃபிஸிக்ஸ்) இத்யாதிகள் – அறுபத்துநாலு கலைகள் என்பதில் எல்லா ஸயன்ஸ், ஆர்ட்ஸ் விஷயங்களும் வந்துவிடும். அத்தனையிலும் முக்யம் வைதிக வாழ்க்கை முறையையும் ஆசார அநுஷ்டானத்தையும் சொல்லும் சாஸ்திரம். எத்தனை சாஸ்திரங்களிருந்தாலும் ‘சாஸ்திரிகள்’ என்று அந்த ஒரு சாஸ்திரம் அறிந்தவரைதான் சொல்கிறோம் ? இப்போது கல்வி முறைக்கு அடியோடு ஸம்பந்தமில்லாததாக, பொது ஜனங்களை ‘முன்னேற்றும்’ கல்விக்கு முட்டுக்கட்டையாக இருப்பதென்றே விரோத பாவத்துடன் கருதப்படுவதாக இருக்கின்ற வேத தர்ம ஸமயாச்சாரந்தான் அன்றைய கல்வி முறைக்கு அச்சாக, ஆணிவேராக இருந்தது. இப்படிப்பட்ட கல்வியில் தேர்ச்சி பெற்றவரே ஊர் ஸபைத் தேர்தலுக்கு அபேக்ஷகராக இருக்கமுடியும் என்று விதி செய்திருக்கிறது.

Wednesday, October 29, 2025

Rig Veda: Let noble thoughts come from all the sides.

Kaizen -
The Japanese term.
Meaning 'good change', 'incremental improvement'.
When an Indian reads good literature from other cultures, the popular counter is, 'what is not there in our own culture, epics, et al, that we expand our reading to anything foreign?'.

No, it's not foreign moha.
Our own Veda, The Rig Veda approves while saying "'Let noble thoughts come from all sides."

The uniqueness lies in our all embracing and inclusive slogan, 'vasu daiva kutumbakam.'

Yet another Rig Veda slogan has the succincts of the title to this topic.:

आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतोऽदब्धासो अपरितासउद्भिदः
A no bhadrah kritavo yantu vishwatah :
May good and noble thoughts come to me from all directions".

- Rig Veda 1.89.1

What a Great Soul Maha Swami is.
Felt it apt to give His views from தெய்வத்தின் குரல்.

Here is the excerpt:
பல ஸித்தாந்த ஒப்புவுமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
Toggle navigation
காமகோடி
இதிலே ஒன்றுமட்டும் கொஞ்சம் புதிதாக அபிவ்ருத்தி செய்துகொள்ள வேண்டும். ‘கம்பேரடிவ் ஸ்டடீஸ்’ என்பதாக யூனிவர்ஸிடிகளில் ஒரு ஃபிலாஸபி ஸிஸ்டத்தை மட்டுமில்லாமல் பலவற்றைப் படித்து ஒன்றுக்கொன்று எப்படி மாறுபட்டுப் போகிறது, எப்படி எத்தனையோ இடங்களில் அவை ஒப்புதலாகவும் போகின்றன என்று அறாய்கிறார்கள். இது ச்லாகிக்கவேண்டிய ஆராய்ச்சி. ஸம்ப்ரதாய முறையிலும் இதர ஸம்ப்ரதாய அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. ஏனென்றால் எந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த எந்த சாஸ்திரத்தை எடுத்தாலும் அதிலே மற்றவர்களின் கொள்கைகளைச் சொல்லி அவற்றைக் கண்டித்துத்தான் ஸ்வபக்ஷத்தை (தன் கட்சியை) நிர்த்தாரணம் செய்திருக்கும். பூர்வபக்ஷத்தில் (எதிராளியின் கட்சியில்) ஆரம்பித்து அவர்கள் கருத்தை டெவலப் செய்தபின்தான் ஸ்வபக்ஷத்தை நாட்டவேண்டுமென்பதே நம் சாஸ்திரக்காரகர்கள், முக்யமாக பகவத்பாதாள், கைக்கொண்ட முறை. ஆனால் தற்போது ஸம்ப்ரதாயப்படிப் படிப்பவர்கள், ஏற்கனவே சாஸ்திரக்காரர்கள் மற்ற ஸித்தாந்தங்களில் என்ன Quote செய்கிறார்களோ அதற்கு மேல் தாங்களாக அந்த சாஸ்திரங்களைப் பார்ப்பதில்லை. அவற்றை இன்னமும் ஊன்றிப் பார்க்கவேண்டும். பிற ஸித்தாந்தங்களை இன்னம் நன்றாக அறிய வேண்டும். கொஞ்சங்கூட ஸொந்த அபிப்ராயங்களினாலும் அபிமானங்களினாலும் prejudice ஆகாமல் ஸத்ய தத்வத்தை அறிவதற்கு இது உதவும். அவரவருடைய பக்வ ஸ்திதியைப் பொறுத்துத்தான் அறிவு வாதமும்கூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முடிவைக் காட்டும், அறிவால் ஒரு விதமான முடிவுக்கு வந்தாலுங்கூட அவரவருக்கும் இதற்கு ஸம்பந்தமில்லாமல்கூட எது மனஸுக்குள்ளே நன்றாகத் தைக்கிறதோ அதைத்தான் ஒருத்தர் பின்பற்றுவார், கடைசியில் பார்த்தால் ஆத்மஸத்யம் என்பது அறிவு வாதங்களுக்கு அப்பாற்பட்டது – என்பதெல்லாம் நிஜந்தான். ஆனாலுங்கூட சாஸ்திரப் படிப்பு என்று ஒன்றை மேற்கொள்கிறபோது அதில் நல்ல தேர்ச்சியை ஸம்பாதித்துக் கொள்வதற்கு நான் சொன்னபடி அவரவரும் தங்களுக்குப் பிடித்த ஸம்ப்ரதாயத்தைத் “தரோ”வாகத் தெரிந்து கொள்வதோடு, மற்றவற்றையும் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவு நன்றாகவே தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் முடிவாக ஒப்புக்கொள்ள முடியாத ஸித்தாந்தங்களிலும் அறிவிலே பெரியவர்களாக வந்திருப்பவர்களின் பெருமையைத் தெரிந்துகொள்ள முடியும். “நம்முடையதுதான் அப்படியே உசத்தி, மற்றது ஒன்றும் இல்லாதது” என்ற குறுகல் பார்வை அறிவுலகத்தில் கூடாதாகையால் சொல்கிறேன்.

பழைய முறையில் அமைக்கிற கலாசாலைகளில், நல்ல இங்கிலீஷ் ஞானமுள்ள சிலர் நம் தேச ஃபிலாஸஃபிகளை மட்டுமில்லாமல், மற்ற தேச ஃபிலாஸஃபிகளையும்கூட இப்படிச் சேர்த்துப் படித்து ஆராய்ச்சி செய்து, புஸ்தகம் போட்டு, அவற்றின் ஸாரத்தையாவது இக் கலாசாலை வித்யார்த்திகளுக்கு தெரிவிக்கும்படியும் செய்யலாம்.

Friday, August 29, 2025

மலைகள், பாறைகள்.... காணாமல் போகலாமா?



மலைகள், பாறைகள் தவிடு பொடியாகின்றன. இது காலப்போக்கில், தட்ப வெப்பநிலை, இயற்கை மாற்றங்களால் நிகழ்ந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் மனித நிகழ்வுகளால் நிகழ்ந்தால், வினா ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

மஹா ஸ்வாமி ஒரு பாறையைக் குறிப்பிடுகிறார். அந்தப் பாறை இப்போது இருக்கிறதா, இருந்தால் தெரிந்தவர்கள் , கல்வெட்டு சாஸ்திர ஈடுபாடு உடையவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மஹா ஸ்வாமி குறிப்பிடுகிற கல்வெட்டு வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள திருவல்லம் என்கிற கிராமத்தில் நீவா எனப்படும் ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள பாறையில் இருக்கிறது.

இதில் சொல்லப்பட்டு இருப்பது அந்தக் காலத்தில் இருந்த ஒரு கடிகையைப் பற்றி. கடிகை ஒரு பெரிய வித்தியாசாலை. இந்தக் கல்வெட்டில் குறித்திருந்த கடிகை மிக விசாலமானது, கிட்டத்தட்ட township என்கிறோமே, அது போல. ஏறத்தாழ 7000 பேர் படித்திருக்கிறார்கள்.

இந்தக் கல்வெட்டுக்களில் குறிப்பிடும் வழக்கம் நம் மூதாதையர் செய்த தர்மங்கள் பின் வரும் சந்ததியர் அறிந்து, காலப்பரிமணங்களில் காணாமல் போய்விடாது காப்பாற்றப் படவேண்டும் என்பதற்காகவே.

ஹர ஹர சங்கர

- courtesy: தெய்வத்தின் குரல், vol 4