எது சாஸ்த்ரோக்தமானது?
ஶ்ரீ யா?
திருவா?
இது ஒன்றை உயர்த்தி உச்சி முகர்ந்தால் கர்வம் கொள்ளும் தாக்கப் பொருளல்ல.
இங்கே உயர்ச்சி தாழ்ச்சிகளுக்கே இடம் இல்லை. Just fallacy.
கவியரசரின் தீர்க்கம்:
"மொழி என்பது மனிதர்களை இணைக்கும் பாலம், அது பண்டிதர்களின் பிடியில் சிக்கித் தனிமைப்பட்டு விடக்கூடாது".
தொன்று தொட்ட பிற மொழித் தொடர்பு, குறிப்பாக சம்ஸ்கிருதத் தொடர்பு குறித்து, கவியரசர்:
"தமிழில் பல நூற்றாண்டுகளாகப் பழகிப்போன வடமொழி (சமஸ்கிருதம்) மற்றும் பிறமொழிச் சொற்களை மக்கள் இயல்பாகப் பேசி வருகிறார்கள். அவற்றை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு, புதிய தூயத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு வருவதால் குழப்பமே மிஞ்சும் என்பது கவிஞரின் வாதம்."
Back to ஶ்ரீ:
மஹா ஸ்வாமி in தெய்வத்தின் குரல் vol 4 chapter அத்வைதம், topic head ப்ரேயஸ் ச்ரேயஸ்
A little etymology:
ச்ரியம் என்பதிலிருந்து ச்ரேயஸ்.
ஶ்ரீ என்பதிலிருந்து ச்ரியம்.
ஶ்ரீ என்றால் லக்ஷ்மி., செல்வத்தின் தேவதை, மங்கள தேவதை.
எது சிறந்த, சரியான செல்வம்?
ஆத்மாவுக்கு நல்லது - ச்ரேயஸ் - செய்கிறவை தான் நிஜமான செல்வமும், மங்களமும் நித்ய ஶ்ரீ யும்.
' உசந்த நன்மைகள் உண்டாக வேண்டும் ' என்று ஆசீர்வதிக்கின்ற போது ' எல்லா ச்ரேயஸ்ம் உண்டாகட்டும் ' என்கிறோம்.
இப்போது ' ஶ்ரீ ' வேண்டாம், ' திரு ' தான் வேண்டும் என்கிறார்கள். தப்பான பாஷாபிமானத்திலே அப்படிச் சொல்கிறார்கள். சில சப்தங்களுக்கே நல்லது செய்யும் சக்தி உண்டு. அதாவது
''ச்ரேயஸ்" உண்டு.
நையாண்டி செய்து விட்டதாக களிப்பில் இருப்பவர்கள் - மொழிக் காவலர் என்றெல்லாம் சுய பிரகடனம் செய்யும் அன்பர்கள் - எல்லாம் சற்றே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். தாங்கள் தாங்கிக் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் தங்கள் தாய் பாஷையில் தங்கள் பாண்டித்யம் எவ்வளவு என்று. துண்டுச் சீட்டே திணறல். எத்தனை பெயருக்கு தங்கள் பெயருக்கு தங்கள் தாய் பாஷையிலேயே பெயர்கள் என்று. பலருக்கு பரத கண்டம் தாண்டிய நாமோதயங்கள். International outlook.
No comments:
Post a Comment