மலைகள், பாறைகள் தவிடு பொடியாகின்றன. இது காலப்போக்கில், தட்ப வெப்பநிலை, இயற்கை மாற்றங்களால் நிகழ்ந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் மனித நிகழ்வுகளால் நிகழ்ந்தால், வினா ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
மஹா ஸ்வாமி ஒரு பறையைக் குறிப்பிடுகிறார். அந்தப் பாறை இப்போது இருக்கிறதா, இருந்தால் தெரிந்தவர்கள் , கல்வெட்டு சாஸ்திர ஈடுபாடு உடையவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மஹா ஸ்வாமி குறிப்பிடுகிற கல்வெட்டு வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள திருவல்லம் என்கிற கிராமத்தில் நீவா எனப்படும் ஆற்றின் மத்தியில் அமைந்துள்ள பாறையில் இருக்கிறது.
இதில் சொல்லப்பட்டு இருப்பது அந்தக் காலத்தில் இருந்த ஒரு கடிகையைப் பற்றி. கடிகை ஒரு பெரிய வித்தியாசாலை. இந்தக் கல்வெட்டில் குறித்திருந்த கடிகை மிக விசாலமானது, கிட்டத்தட்ட township என்கிறோமே, அது போல. ஏறத்தாழ 7000 பேர் படித்திருக்கிறார்கள்.
இந்தக் கல்வெட்டுக்களில் குறிப்பிடும் வழக்கம் நம் மூதாதையர் செய்த தர்மங்கள் பின் வரும் சந்ததியர் அறிந்து, காலப்பரிமணங்களில் காணாமல் போய்விடாது காப்பாற்றப் படவேண்டும் என்பதற்காகவே.
ஹர ஹர சங்கர
- courtesy: தெய்வத்தின் குரல், vol 4
Friday, August 29, 2025
மலைகள், பாறைகள்.... காணாமல் போகலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment