Monday, September 9, 2024

கைலாயம்... நாம ஸ்வரூபத்தில்


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716) 

- திருமந்திரம்

சிவ
சிவ
என்றிட
இறை படைத்த
நா 
ஒன்று போதும்.
நியமங்கள்,
பூஜா,
ஆராதனைகள்
யாவும் இன்றியே.

சிவன்
நேரிடை தரிசனம்
சாத்தியமில்லையா?!
ஏன் இல்லை .
சிவ
சிவ
சிவவே
சிவனே தான்.
கண் இமை
மூடி
ஒரு க்ஷனம்
சிவ
என்று 
ஸ்மரியுங்கள்.
சித்தமெல்லாம்
ஒரு
பரிபூரணம்
உணர்வை
நீங்களே
காண்பீர்கள்.
பெரும் பயிற்சி
ஒன்றும்
தேவையில்லை.

சிவாய நம.



மேலும் 
மஹா ஸ்வாமிகளின்:

சிவ நாம மஹிமை;
சிவன் தரும் மஹிமை.

தெய்வத்தின் குரல் 
Vol 3 

No comments:

Post a Comment