விவாஹம் - எட்டு விதங்கள்
தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருப்பன:
1. பிராமம்;
2.தைவம்;
3. ஆர்ஷம்;
4. ஆஸுரம்
5. பி ராஜாபத்தியம்;
6. காந்தர்வம்;
7. ராக்ஷஸம்;
8. பைசாசம்.
1. பிராமம் -
பிள்ளையின், குருகுலவாஸம் முடித்து அகம் திரும்பிய, பெற்றோர்கள் நல்ல குலத்துப் பெண்ணின் மாதா-பிதாவை அணுகி கன்யாதானம் செய்து தரச்சொல்வது. வரதக்ஷிணை, பரிசம் எல்லாம் இங்கே இரண்டாம் பட்சம். தலையாயது இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்பதே பிராமம் என்கிற விவாஹம்.
2.தைவம் -
உரிய காலத்தில் பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வராத நிலையில் பெண் வீட்டாரே வரன் தேடிச் செல்வது.
உயர்ந்த ஸ்தானத்தில் ஸ்திரிகுலத்தை மேன்மையுறச் செய்கிற சாஸ்திரத்தில், பெண்ணைப் பிள்ளை வீட்டார் தேடி வருவதே சிலாக்கியமான விவாஹம். மிகவும் சிரேஷ்டமானது.
3. ஆர்ஷம் -
இவ் விவாஹம் உரிய காலத்தில் விவாஹம் ஏற்படாத நிலையில் பிள்ளை தருகிற திரவியம் - பொருளைப் பெற்றுக்கொண்டு, மணம் முடிப்பது.
4. பிராஜாபத்தியம் -
அவஸர கதியில் வரன் தேடிச் சென்று செய்கிற விவாஹம்.
5. ஆஸுரம் -
அசுர வேகத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் தகுதியானவான,பொருத்தமானவனா என்றெல்லாம் கருதாது, தான் நினைத்த பெண்ணை அவள் பெற்றோரிடமோ, உறவினரிடமோ பொருட்களைக் கொடுத்து வசப்படுத்திக் கொள்கிற விதமான விவாஹம் இது.
6. காந்தர்வம் -
காதலால் கசிந்து உருகிக் கொள்ளும் விவாஹம். உதாரணம்: சகுந்தலை, துஷ்யந்தன் விவாஹம்.
7. ராக்ஷஸம் -
பெண்ணுக்கும் பிள்ளையிடத்தில் விருப்பம். பிள்ளைக்கும் அவ்வண்ணமே. இருப்பினும் பெற்றோர் தடை. தடையை வென்று செய்து கொள்ளும் விவாஹம் இவ்விதம். உதாரணம் பகவான் கிருஷ்ணர் -ருக்மணி விவாஹம்.
8. பைசாசம் -
இது அத்துமீறல் விவாஹம். பெண் இஷ்டம் என்னவென்பதைக் கருத்தில் கொள்ளாது வற்புறுத்தி நடைபெறும் விவாஹம்.
அனைத்து விதங்களும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவளை பிள்ளையின் மாதா-பிதா தேடிவந்து, கேட்டுப் பண்ணிக் கொள்கிற முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் விதமான 'பிராமம்' தான் சாலச் சிறந்தது.
No comments:
Post a Comment