நேற்று தொலைக்காட்சியில் விவாதம் ஒன்று.
பங்கு கொண்டவர்கள் பல்வேறு அரசியல் மற்றும் கலாசார நிலைப்பாடு உடையவர்கள்.
பகுத்தறிவு - என்ன பகுத்து அறிந்தார்களோ, எம் பெருமானுக்கே வெளிச்சம் - சார்பாக வழக்கறிஞர் ஒருவர். கல்வியாளர் ஒருவர். இன்னும் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
விவாதம் பகுத்தறிவிலிருந்து துவங்கிற்று.
விவாதம் தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்தும், ஆளுநர் மற்றும் முதல்வரின் மாறுபட்ட கல்வி சார் எண்ணங்கள் குறித்தும்.
பகுத்தறிவு ஏதோ தேசிய கல்விக் கொள்கையை வரிப் பிசகாமல் படித்துத் தேர்ந்தவர் போல் தேசியக் கல்வி வாயிலாக விஞ்ஞானத்துக்குப் புறம்பான வேதக் கல்வியை மைய - நமக்கு மைய, இந்த மெத்தப் படித்த மேதாவிகளின் வழக்கில் 'ஒன்றிய' - அரசு திணிக்கப் பார்க்கின்றது என்கிற ரீதியில் வாதங்களை முன் வைத்தார்.
அதில் பங்கேற்ற அரசியல் விமர்சகர், "ஏனய்யா, மைய அரசு தேசிய கல்விக் கொள்கையை பொது வெளியில் வைத்து சகல தரப்பினரின் கருத்து, ஆலோசனைகள் கேட்ட பொழுது, வாளாவிருந்து விட்டு இப்போது எதிர்ப்பதில் என்ன நியாயம்?' என வினவியதற்கு பகுத்தறிவிடமிருந்து தகுந்த பதிலொன்றும் இல்லை.
கடைசியாக கல்வியாளரின் விவாத முன் வைப்பு: "தேசிய கல்விக் கொள்கையில், வேதக் கல்வி என்று எங்கே இருக்கிறது? பகுத்தறிவு நண்பர் கொள்கையைப் படித்து விட்டு பேசுவது போல் தெரியவில்லையே.
ஏதோ, எதை வேண்டுமானாலும் எதிர்க்க வேண்டும் என்கிற ரீதியில் எதிர்ப்பதாகத்தான் இருக்கிறது. "
பகுத்தறிந்த மெத்தப்படித்தவர்களுக்கு புராணங்களும், வேதமும் கட்டுக் கதைகளாக இருந்து விட்டுப் போகட்டும். வேதங்களுக்கும், புராணங்களுக்கும் நட்டமொன்றும் இல்லை.
மஹா பெரியவர் குறிப்பிட்டிருக்கிறார் தெய்வத்தின் குரலில் இரண்டாம் பாகம், அத்யாயத் தலைப்பு : புராணம்:
"நமக்குத் தெரியாதது, தெரிய முடியாதது எல்லாவற்றுக்கும் பொய்யென்று பெயர் வைத்து விடுவது நியாயமில்லை."
No comments:
Post a Comment