Wednesday, July 3, 2024

Karma - the buzz wordPrarabdha karma - மஹா ஸ்வாமிகளின் எளிய விளக்கம்

Karma - the buzz word
Prarabdha karma - மஹா ஸ்வாமிகளின் எளிய விளக்கம் 

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.

Dialogue in a Rajini-starrer movie 

"Learn to see. Realize that everything connects to everything else.”

- Leonardo da Vinci 

ஒரு முறை மஹா ஸ்வாமிகளின் தரிசனத்திற்காக வெளிநாட்டு பக்தர் ஒருவர் காத்திருந்தார்.

அவர் சார்ந்திருந்த மதக் கலாசரப்படி அந்த அந்த பிறவியிலேயே பாப புண்ணியங்களுக்கான பலன்களை அடைவான் என்று.  

நமது கலாச்சாரத்தில் உள்ள பிறவிப்பயன் ஏன் பின்வரும் பிறவிவுகளிலும் தொடர்வதாக நம்பப்படுகிறது என்பது அன்பரின் சந்தேகம். விடை தேடி மஹா சுவாமிகளிடம் விண்ணப்பித்தார்.

மஹா ஸ்வாமி விடையை அன்பர் தானே உணரும் வண்ணம் அன்பரிடம் , ' நான் உங்கள் கேள்விக்கு பதில் கூறுமுன், நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். செய்வீர்களா?".

மஹா சுவாமிகள் கேட்டபின் அன்பர், "தங்கள் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்".

மகாஸ்வமியின் உத்தரவுப்படி அன்பர் காஞ்சி நகர் முழுதும் 10 மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் - பெற்றோர், குழந்தையின் ஆரோக்கிய நிலை, இன்ன பிற தகவல்களையும் மஹா ஸ்வாமிகளின் உத்தரவின்படி திரட்டி வந்தார்.

சில குழந்தைகள் வசதியான பெற்றோர்களுக்கு முதல் குழந்தையாக தரமான மருத்துவமனைகளில் பிறந்ததாகவும், சில குழந்தைகள் ஏழ்மையான பெற்றோருக்கு இரண்டவதகவோ, மூன்றவதகவோ வசதிக் குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பிறந்ததாகவும், சில குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சில குழந்தைகள் ஆரோக்கியக் குறைபடுடையவர்களாகவும் பிறந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Maha Swami's turn now:

எல்லாக் குழந்தைகளும் சற்றேறக்குறைய ஒரே கோள்கள் அமைப்பின் கீழ் ஒரே தினத்தில் பிறந்திருந்தும், ஏன் இவ்வளவு வித்தியாசங்கள் ஒரே சமயத்தில் பிறந்த குழந்தைகளிடம்?

Hence not to blame horoscope.

The lesson:

Do good in this birth.
The Karma entails.
வாழ்க வளமுடன் 





-  

No comments:

Post a Comment